Advertisement

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி ஆர்.டி.ஓ., விசாரணை

தூத்துக்குடி:மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஜோதிபாசு குடும்பத்தினர் நேற்று முன்தினம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வந்திருந்தனர்.

கோயில் முன் கடற்கரையையொட்டி உள்ள போலீஸ் புறக்காவல் நிலையம் பகுதியில் ஜோதிபாசுவின் மகன் பிரசாத் 22, உட்காந்திருந்தார். அங்கிருந்த மின்சார எர்த் ஒயரில் பிரசாத் கைபட்டதில் மின்சாரம் தாக்கி இறந்தார். இச்சம்பவத்தை கண்டித்து பா.ஜ.வினர் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து விசாரணை மேற்கொள்ள கலெக்டர் லட்சுமிபதி உத்தரவிட்டார். நேற்று திருச்செந்தூர் ஆர்.டி.ஓ., குருசந்திரன், மின்வாரிய செயற்பொறியாளர் விஜய சங்கர பாண்டியன், தாசில்தார் வாமனன் உள்ளிட்டோர் அங்கு ஆய்வு செய்தனர். ஆய்வறிக்கையை கலெக்டரிடம் சமர்ப்பிக்க உள்ளதாக ஆர்.டி.ஓ., குரு சந்திரன் தெரிவித்தார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement