Advertisement

இலங்கைக்கு கடத்த இருந்த 1500 கிலோ பீடி இலை பறிமுதல்

துாத்துக்குடி:துாத்துக்குடி வழியே இலங்கைக்கு படகில் கடத்த இருந்த 1500 கிலோ பீடி இலை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. லாரி டிரைவர் கைது செய்யப்பட்டார்.

துாத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட கடற்கரை வழியே இலங்கைக்கு மஞ்சள், பீடி இலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. துாத்துக்குடி தாளமுத்துநகர் கடற்கரை பகுதியில் நேற்று மரைன் போலீசார் வாகன சோதனை மேற்கொண்ட போது ஒரு லாரியில் 1500 கிலோ எடையுள்ள 40 பீடி இலை பண்டல்கள் இருந்தன. அதனை கடத்தல் நபர்கள் படகில் இலங்கைக்கு கடத்த திட்டமிட்டு இருந்தனர். லாரி, பீடி இலைகளை பறிமுதல் செய்த போலீசார் லாரி டிரைவர் துாத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த ஆதவனை 24, கைது செய்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement