Advertisement

கோவில்பட்டியில் ரூ.25 லட்சம் நகைகள் துணிகர கொள்ளை

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கணேஷ்நகரைச் சேர்ந்தவர் சந்திரமோகன், 62. இவர் மதுரையில் ஹோட்டல் நடத்தி வருகிறார். இவரது மனைவி அருள்மணி. இவர்களது மகன் கார்த்திக், 38, தேனியில் தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிவதால் அங்கு குடும்பத்துடன் வசிக்கிறார்.

சந்திரமோகனும் மனைவியும் நவ., 27ல், தேனி மகன் வீட்டுக்கு சென்றனர். கோவில்பட்டி வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற வரும் வாட்ச்மேன் நடராஜன்வந்த போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

அந்த தகவலை அவர் சந்திரமோகனிடம் தெரிவித்தார். அவர் வந்து பார்த்தபோது வீட்டில் பீரோவில் இருந்த 25 லட்சம் ரூபாய் மதிப்பில் 62 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள், பட்டு சேலைகள் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement