Advertisement

திருச்செந்தூர் கோயில் மின்சாரம் தாக்கி பக்தர் பலி

திருச்செந்தூர் ; திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயிலில் மின்சாரம் தாக்கி பக்தர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
மதுரை, திருப்பரங்குன்றம் பகுதியைச் சேர்ந்த ஜோதிபாஸ் என்பவர், தனது குடும்பத்தினருடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று வந்துள்ளார். அவர்கள் அனைவரும் கடலில் புனித நீராடி, தரிசனத்தை முடித்து விட்டு வந்துள்ளனர். பின், ஜோதிபாஸ் தனது மகனுடன் திருச்செந்தூர் கோயிலின் புறக்காவல் நிலையம் முன்பு அமர்ந்துள்ளனர். அப்போது அங்கு அமைக்கப்பட்டிருந்த, எர்த் பைப்பில் இருந்து மின் கசிவு ஏற்பட்டு எதிர்பாராத விதமாக பிரசாத் (வயது 22) மீது மின்சாரம் பாய்ந்துள்ளது.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பிரசாத்தின் தந்தை மற்றும் போலீசார் மின்சாரம் தாக்கப்பட்ட பிரசாத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரசாத் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இது குறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய தூத்துக்குடி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
லட்சக்கணக்கான பக்தர்கள் வரக்கூடிய இக்கோயிலில், நிர்வாகத்தினரின் அலட்சியத்தால் தான் இப்படி ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது என உயிரிழந்த பக்தரின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். இச்சம்பவத்தை கண்ட பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.



வாசகர் கருத்து (3)

  • Sathyasekaren Sathyanarayanana - Kulithalai ,இந்தியா

    அறநிலையத்துறையின் கிரிப்டோக்கள் ஊடுருவிட்டார்கள், வழக்கம் போல் ஹிந்துக்கள் றூங்கிக்கொண்டு இருக்கிறார்கள். நம்மில் எத்தனை பேர் நம் ஊரில் உள்ள கோவிலுக்கு சென்று அங்கே உள்ள அதிகாரிகள் ஊழியர்கள் ஹிந்துக்கள் தான, அவர்கள் பணிகளை செய்கிறார்களா என்று பார்த்திருக்கிறோமா? கோவிலுக்கு உள்ள சொத்துக்கள் பற்றி அவற்றில் வரும் வாடகை, வருமானம் பற்றி கேள்விகேட்டு இருக்கிறோமா? கோவிலில் மாற்று மதத்தினர் கடை வெளிப்படையாக தெரிந்தாலும், வாய் மூடி கடந்து செல்கிறோம். திருந்த வேண்டியது ஹிந்துக்கள் தான். ஹிந்துக்களின் எதிரி / ஹிந்துக்களை அழிக்க துடிப்பவர்களை தெரிந்தே ஆட்சியில் அமரவைத்து ஹிந்துக்கள் செய்த குற்றம். பாவம் இந்து முன்னணியினர். தனியாக நான்கு ஐந்து பேர் சேர்ந்து கத்தி கொண்டு இருக்கிறார்கள். பல்லாயிரக்கண்ணாக பக்தர்கள் கூடும் திருவண்ணாமலையில் அம்மணி அம்மாள் கட்டிய மண்டபத்தை பிடித்தபோது அந்த வழியாக பார்த்துக்கொண்டு சும்மா தானே சென்றார்கள். பழனியில் வேல் அப்புறப்படுத்தபோது கண்களை மூடி கொண்டு தானே சென்றார்கள். வெட்கக்கேடு.

  • Nagarajan D - Coimbatore,இந்தியா

    வழக்கம்போல அரசுத்துறையில் அலட்சியம்

  • senthilkumar - Coimbatore,இந்தியா

    Yesterday I went temple,the worst management.. very bad condition

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement