Advertisement

ஈரோடு மாவட்டத்தில் 11 மாதத்தில் 80 போக்சோ வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, 11 மாதத்தில், 80 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன.
இதுகுறித்து மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்க எதிரான குற்ற நடவடிக்கை தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி., மணிமாறன் கூறியதாவது:

மாவட்டத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்கிறோம்.
பள்ளி, கல்லுாரி மாணவியர் பாலியல் தொல்லைகளால் பாதிக்கும்போது மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கை, புகார் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் குறித்தும், குழந்தை திருமணத்தை தடுப்பது குறித்தும் விளக்குகிறோம். வெளியிடங்களில் பாலியல் சீண்டல்களால் பாதிக்கப்படும்போது, பெற்றோர் அல்லது ஆசிரியர்களிடம் தகவல் தெரிவிப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளோம்.
கடந்த, 11 மாதத்தில் மட்டும் குழந்தை திருமணங்கள் உட்பட, 80 போக்சோ வழக்குகள் பதிவாகியுள்ளன. அதேசமயம் இந்தாண்டில் இதுவரை, 27 போக்சோ வழக்குகளில் குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது. குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவில் இதுவரை, 37 குழந்தைகள் மாயம் தொடர்பான வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில், 19 குழந்தைகள் மீட்கப்பட்டு
ஒப்படைக்கப்பட்டனர்.
படிக்க விருப்பமில்லாதது, காதல், குடும்பத்தில் ஏற்படும் சில வெறுப்பு, மன அழுத்தம் போன்ற காரணத்தால் குழந்தைகள் காணாமல் போகின்றனர். அதுபோன்றவர்களையும் கண்டறிந்து, கவுன்சிலிங் வழங்கி பெற்றோரிடம் ஒப்படைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement