Advertisement

பேரூராட்சி தி.மு.க., தலைவரை கண்டித்து கட்சி கவுன்சிலர்கள் போராட்டம்

ADVERTISEMENT
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பேரூராட்சி தி.மு.க., தலைவர் தேவியை கண்டித்து அக்கட்சி கவுன்சிலர்களே வெளிநடப்பு செய்து வாயில் கருப்பு துணியை கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேரன்மகாதேவியில் பேரூராட்சி கவுன்சில் கூட்டம் நடந்தது. செயல்அலுவலர் காதர் முன்னிலை வகித்தார். வார்டுகளில் அடிப்படை வசதிகளை செய்து தராதது குறித்து தி.மு.க., கவுன்சிலர்கள் தலைவர் தேவியிடம் கேள்வி எழுப்பினர். இதனால் தலைவருக்கும் கவுன்சிலர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

தி.மு.க., கவுன்சிலர்கள் தங்கராஜ், அன்வர் உசேன் மற்றும் தி.மு.க., பெண் கவுன்சிலர்கள் பரக்கத் பேகம், செய்பு நிஷாபேகம், தேவி, மல்லிகா ஆகியோர் தலைவர் தேவியை கண்டித்து வெளிநடப்பு செய்தனர். அலுவலகம் முன் வாயில் கருப்பு துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். தேவியின் கணவர் ஐயப்பன் பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிடுவதாகவும் தி.மு.க., கவுன்சிலர்கள் குற்றம் சாட்டினர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement