Advertisement

அணுமின் நிலையத்திற்கு எதிராக தி.மு.க.,வினர் மனு

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தாலுகா கூடங்குளம் அணுமின் நிலைய சமூக மேம்பாட்டு வளர்ச்சி நிதி தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டி, டிச., 20ல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக கலெக்டர் கார்த்திகேயனிடம் தி.மு.க., மாவட்ட ஊராட்சி தலைவர் ஜெகதீஷ் தலைமையில், அக்கட்சி உள்ளாட்சி பிரதிநிதிகள் மனு அளித்தனர்.

அதில் அவர்கள் கூறியுள்ளதாவது:

அணுமின் நிலையத்தின் சி.எஸ்.ஆர்., எனப்படும் சமூக மேம்பாட்டு வளர்ச்சி திட்ட நிதி ராதாபுரம் பகுதிக்கு மட்டுமே செலவிடப்பட வேண்டும். ஆனால் அந்த நிதியை விருதுநகர், ராமநாதபுரம் போன்ற மாவட்டங்களுக்கும் செலவழித்துள்ளனர்.

ராதாபுரம் வட்டார மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும். கூடங்குளம் அரசு மருத்துவமனையில் 5 டாக்டர்களை நிரந்தரமாக நியமிக்க வேண்டும். கூடங்குளம் அணுமின் நிலைய நிதி 2.5 கோடி ரூபாயில் 50 லட்சம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் நடந்துள்ளது. மீதமுள்ள பணத்தை அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் கையாடல் செய்துள்ளனர்.

இவ்வாறு அந்த மனுவில் தி.மு.க., உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement