Advertisement

திருச்செந்துார் கோவிலில் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

துாத்துக்குடி:மதுரை திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த ஜோதிபாசு குடும்பத்தினர் நேற்று திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்திருந்தனர்.
கோவில் முன் கடற்கரையையொட்டி உள்ள பகுதியில் ஜோதிபாசுவின் மகன் பிரசாத், 22, உட்கார்ந்திருந்தார். நேற்று பகலில் அங்கு லேசாக மழை பெய்தது. அங்கிருந்த மின்சார எர்த் வயரில் பிரசாத் கைபட்டதில் மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார். அங்கிருந்தவர்கள் உடனே ஆம்புலன்ஸ் வாயிலாக, திருச்செந்துார் அரசு மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர்.
டாக்டர்கள் பரிசோதித்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement