Advertisement

மெடிக்கல் நிறுவனம் ரூ.10,000 இழப்பீடு வழங்க கோர்ட் உத்தரவு

திருநெல்வேலி:திருநெல்வேலியைச் சேர்ந்த மணி என்பவர், 2020 மார்ச் 20ல், கொரோனா காலகட்டத்தின் போது அப்பகுதியிலுள்ள மெடிக்கல் நிறுவனம் ஒன்றில் 50 முக கவசங்கள் வாங்கி துாய்மை பணியாளர்களுக்கு இலவசமாக வழங்கினார். ஒரு கவசம் 28 ரூபாய்க்கு அவர் வாங்கினார்.

அதே தேதியில், மற்றொரு இடத்தில் உள்ள அதே நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு கடையில் தனியாக நான்கு முக கவசங்களை தலா, 10 ரூபாய்க்கு வாங்கினார். ஒரே நிறுவனம் ஒரு பொருளுக்கு இரு வேறு விலை வைத்தது முறையற்ற வணிகம் என கூறிய மணி, அதிகம் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டார்.

ஆனால், அந்த நிறுவனம் வழங்க மறுத்தது. வழக்கறிஞர் பிரம்மா மூலம் மெடிக்கல் நிறுவனம் மீது மணி நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். நீதிபதி கிளஸ்டோன் பிளஸ்ட் தாகூர், உறுப்பினர் கனகசபாபதி ஆகியோர் மெடிக்கல் நிறுவனம் மணிக்கு இழப்பீடு 10,000, வழக்குச் செலவு 2,000 ரூபாய் வழங்க உத்தரவிட்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement