Advertisement

கால்வாயில் கட்டிய கோவில் கட்டடம் இடித்து அகற்றம்

திருநெல்வேலி:திருநெல்வேலி டவுன் பேட்டை அருகே கண்டியப்பேரியில் உய்காட்டு சுடலை கோவில் உள்ளது. அதன் பின்புறம் கோடகன்கால்வாய் செல்கிறது கோவிலின் பின்புறம் கால்வாயை ஒட்டி புதிய கட்டடம் கட்டப்பட்டிருந்தது. இதற்கு பொதுப்பணித்துறையினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் கோவில் கட்டடம் கால்வாயில் இருப்பதை அறிந்து இடிக்க முடிவு செய்தனர். நேற்று முன்தினம் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள், போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரப்பு கட்டடம் இடிக்கப்பட்டது.

கிராமத்தைச் சேர்ந்த மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க சென்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement