Advertisement

ஜன., 21ல் கள் இறக்கி விற்பனை: தமிழ்நாடு கள் இயக்கம் அறிவிப்பு

ஈரோடு: ''தமிழகத்தில் திட்டமிட்டபடி வரும் ஜன., 21ல், கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும்,'' என, தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி நிருபர்களிடம் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:உலக அளவில், 108 நாடுகளில் பனை, தென்னை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்கவும், பருகவும் தடை விதிக்கப்படவில்லை. தமிழகத்தில் மட்டுமே கடந்த, 35 ஆண்டுகளுக்கு மேலாக கள்ளுக்கான தடை தொடர்கிறது.

மனித உணவில் கள் ஒரு பகுதியாகும். கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு வழங்கி உள்ள உணவு தேடும் உரிமைகளில் ஒன்றாகும்.
கள்ளில் கலப்படம் செய்யப்படுகிறது என ஒற்றை காரணத்தை கூறி, அனுமதி வழங்க மறுப்பது தவறானதாகும். கேரளாவில் கள்ளுக்கு அனுமதியும், முழுமையாக பயன்படுத்த வழிகளும் உள்ளது. அங்கு எந்த கலப்படமும், தவறும் நடக்கவில்லை. எனவே தமிழக அரசு உடனடியாக கள்ளுக்கான தடையை நீக்கி, கள் இறக்கி சந்தைப்படுத்த அனுமதி வழங்க வேண்டும்.
அல்லது வரும் ஜன., 21ல் திட்டமிட்டபடி தமிழகத்தில் கள் இறக்கி சந்தைப்படுத்தப்படும். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை மதித்து முதல்வர் ஸ்டாலின், கள்ளுக்கான தடையை நீக்கி அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement