Advertisement

ராகிங் எதிர்ப்பு சட்டங்கள் குறித்து அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு முகாம்

ADVERTISEMENT


ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வட்ட சட்டப் பணிகள் குழு சார்பில், ராகிங் எதிர்ப்பு சட்டங்கள் குறித்த விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

வாணாபுரம் அடுத்த அரியலுாரில் இயங்கி வரும், ரிஷிவந்தியம் அரசு கல்லுாரியில் ராகிங் எதிர்ப்பு சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு, சங்கராபுரம் வட்ட சட்டப்பணிகள் குழுத் தலைவரும், மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதியுமான முல்லைவாணன் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் ரேவதி வரவேற்றார்.

சங்கராபுரம் சட்டப்பணிக்குழு வழக்கறிஞர்கள் திருநாவுக்கரசு, சிரஞ்சீவி ஆகியோர் ராக்கிங் எதிர்ப்பு, அதற்கான சட்டங்கள், தண்டனைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கி கூறினர். நிகழ்ச்சியில் கல்லுாரி தமிழ்த்துறைத் தலைவர் சண்முகம் மற்றும்

பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

நிர்வாக உதவியாளர் சீதாலட்சுமி நன்றி கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement