Advertisement

குட்கா விற்ற 3 பேர் கைது திருநாவலுார் போலீசார் அதி ரடி



உளுந்துார்பேட்டை: திருநாவலுார் அருகே பெட்டிக்கடைகளில் குட்கா பொருட்களை விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

உளுந்துார்போட்டை தாலுகா திருநாவலுார் , கெடிலம் பகுதி பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர்.

குட்கா பொருட்கள் விற்பனை செய்த கெடிலம், சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த ராமன், 62: திருநாவலுார் பகுதியை சேர்ந்த சுகுமார் 44, மடப்பட்டு பகுதியை சேர்ந்த வைரக்கண்ணு மகன் ஐயப்பன், 27; ஆகிய மூன்று பேரை கைது செய்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement