Advertisement

கார் விபத்தில் வட்டார கல்வி அலுவலர் பலி

ADVERTISEMENT


உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே அதிவேகத்தில் சென்ற கார் காப்பு காட்டு பகுதியில் புகுந்து விபத்துக்குள்ளானதில் வட்டார கல்வி அலுவலர் பரிதாபமாக இறந்தார்.

உளுந்துார்பேட்டை அடுத்த வெள்ளையூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாபுகென்னடி.

இவரது காரில் தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலர் செலின்மேரி, 55; திருநாவலுார் வட்டார வளமைய ஆசிரியர் ஜெயந்தி, 39; எலவனாசூர்கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உதவியாளர் கிருபா, 30; ஆகியோர் சென்றனர்.

இவர்கள் உளுந்துார்பேட்டை பகுதியில் உள்ள பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி மாணவர் சேர்க்கை குறித்து ஆய்வு செய்த பின் அறிக்கையை வழங்க தியாகதுருகம் வட்டார கல்வி அலுவலகத்திற்கு சென்றனர்.

நேற்று மாலை 4:00 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த ஏ.குமாரமங்கலம் அருகே அதிவேகத்தில் சென்ற கார், கட்டுப்பாட்டை இழந்து சாலையோர காப்பு காட்டு பகுதிக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வட்டார கல்வி அலுவலர் செலின்மேரி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

காரில் பயணித்த மற்ற மூன்று பேர் படுகாயமடைந்தனர். உடன் அருகில் இருந்தவர்கள் காயமைடைந்தவர்களை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

போலீசார் இறந்த செலின்மேரியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தகவல் அறிந்த எலவனாசூர்கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை செய்து வருகின்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement