Advertisement

கீழ்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு



கள்ளக்குறிச்சி: கீழ்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழ்குப்பம் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.பி., மோகன்ராஜ் நேற்று ஆய்வு செய்தார். அதில், நடப்பாண்டு காவல் நிலையத்தில் பதியப்பட்ட மொத்த வழக்குகளின் விபரம், திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளின் விபரங்களின் தற்போதைய நிலை, பழைய குற்றவாளிகள் குறித்த விபரம், தினசரி கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் மற்றும் போலீசாரின் கவாத்து பயிற்சி, அவர்களுக்கு வழங்கப்பட்ட உடமை பொருட்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.

தொடர்ந்து காவல் நிலைய வளாகத்தில் எஸ்.பி., மோகன்ராஜ் மரக்கன்றுகள் நட்டார். அப்போது டி.எஸ்.பி., ரமேஷ், சின்னசேலம் இன்ஸ்பெக்டர் ராஜாராமன், கீழ்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் மற்றும் போலீசார் பலர் உடனிருந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement