Advertisement

ஐயப்ப சுவாமிக்கு 108 திரவிய பூஜை

ADVERTISEMENT


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி சிவன் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு 108 விசேஷ திரவியங்கள் மற்றும் சங்காபிஷேகம் நடந்தது. கள்ளக்குறிச்சி சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோவிலில் ஐயப்ப சுவாமிக்கு நேற்று 108 விசேஷ திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. காலை 7:00 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் துவங்கி, பூர்ணாஹீதியும், தீபாராதனையும் நடந்தது.

காலை 10:30 மணிக்கு பால், தயிர், மஞ்சள், விபூதி, சந்தனம், இளநீர், எலுமிச்சை, தேன், நெய், கங்காதீர்த்தம் உள்ளிட்ட 108 விசேஷ திரவியங்கள், கனி வகைகளால் சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து 108 சங்காபிேஷகம் நடந்தது. இதிலிருந்த புனித தீர்த்தங்களை சுவாமிக்கு ஊற்றி அபிஷேகம் செய்தனர்.

பல வண்ண மலர்களால் புஷ்பாஞ்சலி செய்து சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மாலை 5:00 மணிக்கு சுவாமி கொலுவிருத்தலும், திருக்கோவிலுார் நாதஸ்வர கலைஞர்களின் இசைவிழாவும் நடந்தது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை குமார் குருசாமி குழுவினர் செய்திருந்தனர்.வைபவங்களை ஆலய அர்ச்சகர் அம்பி குருக்கள் குழுவினர் செய்து வைத்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement