Advertisement

பருத்தி வார சந்தையில் ரூ.2.65 லட்சத்துக்கு கொள்முதல்

ADVERTISEMENT


கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த பருத்தி வார சந்தையில் ரூ.2.65 லட்சத்துக்கு பஞ்சு கொள்முதல் செய்யப்பட்டது.

கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி வார சந்தைக்கு விவசாயிகள் பஞ்சு மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி நேற்று நடந்த சந்தைக்கு எல்.ஆர்.ஏ., ரக பஞ்சு 120 மூட்டைகள் விற்பனைக்கு எடுத்து வரப்பட்டன. எல்.ஆர்.ஏ., ரகம் குறைந்தபட்சம் 6,400 ரூபாய்க்கும், அதிகபட்சம் 7,020 ரூபாய்க்கும் விலை போனது. அதன்படி 53 விவசாயிகள் கொண்டுவந்த 120 பஞ்சு மூட்டைகள், 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது.


வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement