Advertisement

ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் திருப்பணி துவக்கம்

ADVERTISEMENT


ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ரூ.66 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கான பாலாலய நிகழ்ச்சி நேற்று நடந்தது.

ரிஷிவந்தியத்தில் சுமார் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சேதமடைந்த நிலையில் உள்ள சுவாமி சன்னதிகள், ராஜகோபுரத்தை புனரைமக்க அறநிலையத்துறை சார்பில் ரூ.66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதனையடுத்து, திருப்பணிகள் துவங்குவதற்கான பாலாலய நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு, வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, திருப்பணிகளை துவக்கிவைத்தார். நாகராஜ் தலைமையிலான குருக்கள் பாலாலய பூஜைகளை செய்தனர்.

நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், துரைமுருகன், அசோக்குமார், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பாலாஜிபூபதி, மாவட்ட துணை செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜி, தொழிலாளர் அணி தலைவர் சிவமுருகன், பொதுக்குழு உறுப்பினர் ராஜி, அறநிலையத்துறை செயல் அலுவலர் அருள், எழுத்தர் லோகநாதன், கோவில் கட்டளைதாரர்கள் கண்ணன், துரைராஜ், சக்திவேல், அர்த்தநாரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement