Advertisement

சங்கராபுரம் பகுதியில் காய்ச்சல் மருத்துவ முகாம் நடந்த கோரிக்கை



சங்கராபுரம்,: சங்கராபுரம் பகுதியில் தொடர் மழை காரணமாக கிராமங்களில் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் மருத்துவ முகாம் நடந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சங்கராபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக சங்கராபுரம் சுற்றி உள்ள தியாகராஜபுரம், பாண்டாலம், வடசிறுவளுர், பொய்குனம், செட்டியந்துார், மஞ்சபுத்துார், பூட்டை, செம்பராம்பட்டு, எஸ்.குளத்துார் உள்ளிட்ட கிராமங்களில் காய்ச்சலால் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காய்ச்சல் காரணமாக சங்கராபுரம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.

தொடரும் காய்ச்சலை தடுக்க சங்கராபுரம் பகுதி கிராமங்களில் சுகாதார துறையினர் மருத்துவமுகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement