Advertisement

சங்கராபுரத்தில் பா.ஜ., ஆலோசனை கூட்டம்

ADVERTISEMENT


சங்கராபுரம்,: சங்கராபுரத்தில் பா.ஜ., ஆலோசனை கூட்டம் நடந்தது.

'என் மண் எண் மக்கள்' பாதயாத்திரை டிசம்பர் 15,16 ஆகிய தேதிகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடக்கவுள்ளது. இது குறித்து ஆலோசனைக் கூட்டம் தேவபாண்டாலம் அரிசி ஆலை மண்டபத்தில் நடந்தது. மாவட்டத் தலைவர் அருள் தலைமை தாங்கினார். ஒன்றியத் தலைவர்கள் ராமச்சந்திரன்,வேல்முருகன், ஜி.ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொது செயலாளர்கள் ராஜேஷ், ஜெயதுரை, தியாகராஜன் ஆகியோர் பேசினர்.

கூட்டத்தில் டிசம்பர் 16ல் வரும் பாதயாத்திரையில் சங்கராபுரம் தொகுதியைச் சேர்ந்த 20,000 பேர் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரகாஷ்,ஒன்றிய பொது செயலாளர் கோவிந்தன், முத்தையன், சுரேந்திரன், யோகசெல்வன், மூர்த்தி, பாஸ்கர் உட்பட பலர் திரளாக பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement