Advertisement

சிமென்ட் சாலை பணி ஒன்றிய சேர்மன் ஆய்வு

ADVERTISEMENT


கள்ளக்குறிச்சி: அகரகோட்டாலம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பிலான சிமென்ட் சாலை அமைக்கும் பணியை ஒன்றிய சேர்மன் ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் மாதாகோவில் தெருவில் வடிகால் வசதியுடன் புதிய சாலை அமைத்து தரவேண்டும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய பொது நிதி மூலம் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான சிமென்ட் சாலை, வடிகால் மற்றும் குடிநீர் குழாய் அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.

சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம் நேற்று பார்வையிட்டார்.

அப்போது, சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆய்வின்போது தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய கவுன்சிலர் பிரியா ராஜாராம், முன்னாள் ஊராட்சித் தலைவர் கந்தசாமி, வார்டு உறுப்பினர் ஸ்டீபன் உட்பட பலர் உடனிருந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement