Advertisement

மருந்து வணிகர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம்

ADVERTISEMENT


சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மருந்து வணிகர் சங்க மாவட்ட செயற்குழுக் கூட்டம் நடந்தது.

சங்கராபுரம் ரோட்டரி மண்டபத்தில் நடந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். சங்கராபுரம் வட்டத் தலைவர் நாச்சியப்பன், மாவட்ட துணைத் தலைவர் செங்குட்டுவன், அமைப்பு செயலாளர் ராசேந்திரன், இணை செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் வரவேற்றார். மாவட்ட பொது செயலாளர் மதியழகன் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பொதுக்குழு கூட்டத்தை சங்கராபுரத்தில் டிசம்பர் 24 ம் தேதி நடத்துவது என்றும், சங்கத்தில் அதிக அளவில் உறுப்பினர் சேர்ப்பது, மருந்து வணிக சட்ட திட்டங்களுக்கு ஏற்ப மருந்து வணிக நிறுவனங்களை நடத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மொத்த மருந்து வணிகர் பிரிவுத் தலைவர் சேகர் கள்ளக்குறிச்சி தாலுகா தலைவர் பழனிவேல், உளுந்துார்பேட்டை செயலாளர் சீனுவாசன், திருக்கோவிலுார் தலைவர் விவேகாநந்தன், சின்னசேலம் தலைவர் நடராஜன், தியாகதுருகம் அரிகுமார், சங்கராபுரம் சந்திரசேகர் ஆகியோர் பேசினர்.

பொருளாளர் துரை நன்றி கூறினார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement