Advertisement

பள்ளி மேலாண்மை குழுவிற்கு இரண்டு நாள் பயிற்சி முகாம்

ADVERTISEMENT


சங்கராபுரம்: சங்கராபுரத்தில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் நடந்தது.

சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட அரசு தொடக்க,நடுநிலை,உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளியில் உள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் வட்டார வள மையத்தில் நடந்தது. வட்டார வள மைய மேற்பார்வையாளர் கவிதா தலைமை தாங்கி துவக்கிவைத்தார்.

வட்டார கல்வி அலுவலர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட திட்ட அலுவலர் நெடுஞ்செழியன்,ஒருங்கிணைப்பாளர்கள் ஞானவேல்,வண்ணத்தமிழன் மற்றும் மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் சுப்ரமணியன் கலந்து கொண்டனர்.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள்,பள்ளி மேலாண்மை குழுத் தலைவர்,துணைத் தலைவர்,கல்வியாளர்கள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement