Advertisement

மருத்துவ காப்பீட்டு திட்ட சிறப்பு பதிவு முகாம்



கள்ளக்குறிச்சி: முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்ட சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் வரும் 2ம் தேதி சங்கராபுரம், வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.

இது குறித்து கலெக்டர் ஷ்ரவன்குமார் விடுத்துள்ள செய்திகுறிப்பு;

முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவையொட்டி முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 100 சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் நடக்கிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு சிறப்பு பதிவு சேர்க்கை முகாம்கள் வரும் 2 ம் தேதி சங்கராபுரம் தாலுகா அலுவலக வளாகம், ரிஷிவந்தியம் தொகுதிக்குட்பட்ட வாணாபுரம் தாலுகா அலுவலக வளாகத்தில் நடக்கிறது.

முகாமில், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யாத பயனாளிகள் தங்களது குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டையுடன் வந்து பதிவு செய்து கொண்டு பயனடையலாம். மேலும் முகாமில் பதிவு செய்ய தவறியவர்கள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூடுதல் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் பதிவு மையத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement