Advertisement

திருப்புவனம் புதுாரில் சாலை மோசம்: விவசாயிகள் அவதி



திருப்புவனம் : திருப்புவனம் புதுாரில் இருந்து நான்கு வழிச்சாலைக்கான இணைப்புச்சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.

மதுரையில் இருந்து பரமக்குடி வரையிலான நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்ட பின் கிராமங்களில் இருந்து நான்கு வழிச்சாலைக்கு இணைப்புச்சாலை அமைக்கப்பட்டுள்ளன. திருப்புவனம் புதுாரில் இருந்து பிரமனுார் கால்வாயை கடந்து நான்கு வழிச்சாலை வரை இரண்டு கி.மீ.,க்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது.

மாநில நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இச்சாலை அமைக்கப்பட்டு 20 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது. இச்சாலை வழியாக விவசாயிகள் பலரும் தங்களது விளைநிலங்களுக்கு பொருட்களை கொண்டு சென்று வருகின்றனர். இச்சாலையில் கற்கள் பெயர்ந்தும் பல இடங்களில் பள்ளமாகவும் உள்ளதால் விவசாய பொருட்களை கொண்டு செல்லும் போது விபத்து ஏற்படுகின்றன. சாலை பழுதடைந்து இருப்பதால் நெல் அறுவடை இயந்திரம், கரும்பு வெட்டும் இயந்திரம் உள்ளிட்டவைகள் செல்ல் முடியாமல் நீண்ட தூரம் சுற்றி வர வேண்டியுள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement