Advertisement

இருமுடி திருவிழா; மேல்மருவத்துாரில் ரயில்கள் நிற்கும்



மதுரை : மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் டிச.1 முதல் ஜன. 25 வரை இருமுடித் திருவிழா நடக்கிறது. தென்மாவட்ட பயணிகளின் வசதிக்கேற்ப பல்வேறு விரைவு ரயில்கள் இங்கு நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை வைகை எக்ஸ்பிரஸ் (12636/12635), பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12637), பொதிகை எக்ஸ்பிரஸ் (12661), அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20691) டிச., 1 முதல் ஜன., 25 வரையும்,

மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் (12638), பொதிகை எக்ஸ்பிரஸ் (12662), அந்தியோதயா எக்ஸ்பிரஸ் (20692), கொல்லம் எக்ஸ்பிரஸ் (16102), நாகர்கோவில் - தாம்பரம் எக்ஸ்பிரஸ் (22658) நவ., 30 முதல் ஜன., 24 வரையும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை -- தாம்பரம் எக்ஸ்பிரஸ் (20684), கன்னியாகுமரி - டில்லி நிஜாமுதீன் திருக்குறள் எக்ஸ்பிரஸ் (12641) டிச., 1 முதல் ஜன., 24 வரையும்,

செங்கோட்டை -- சென்னை சிலம்பு எக்ஸ்பிரஸ் (20682) நவ., 30 முதல் ஜன., 21 வரையும்,

தஞ்சாவூர் மெயின்லைன் வழியாக செல்லும் மதுரை -- சென்னை எக்ஸ்பிரஸ் (22624) நவ., 30 முதல் ஜன., 20 வரையும்,

மதுரை -- டில்லி நிஜாமுதீன் சம்பர்கிரந்தி எக்ஸ்பிரஸ் (12651) டிச., 3 முதல் ஜன., 23 வரையும், ராமேஸ்வரம் - அயோத்தியா கண்டோன்மென்ட் சேது சிரத்தா எக்ஸ்பிரஸ் (22613), பனாரஸ் -- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (22536) டிச., 3 முதல் ஜன., 21 வரையும் மேல்மருவத்துாரில் நின்று செல்லும்படி தற்காலிக நிறுத்தம் வழங்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில் -- சென்னை எக்ஸ்பிரஸ் (12668), மதுரை -- மும்பை குர்லா எக்ஸ்பிரஸ் (22102), புவனேஸ்வர் - -ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20896) டிச., 1 முதல் ஜன., 19 வரையும், தஞ்சாவூர் மெயின்லைன் வழி சென்னை -- மதுரை எக்ஸ்பிரஸ் (22623) டிசம்பர் 1 முதல் ஜன., 21 வரையும்,டெல்லி நிஜாமுதீன் -- மதுரை சம்பர் கிரந்தி எக்ஸ்பிரஸ் (12652) நவ., 30 முதல் ஜனவரி 23 வரையும்,அயோத்தியா கண்டோன்மென்ட் - ராமேஸ்வரம் சேது சிரத்தா எக்ஸ்பிரஸ் (22614) நவ., 29 முதல் ஜன., 17 வரையும், சென்னை -- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (12667) டிச., 7 முதல் ஜன., 25 வரையும், மும்பை குர்லா -- மதுரை எக்ஸ்பிரஸ் (22101) டிச., 6 முதல் ஜன., 24 வரையும், ராமேஸ்வரம் -- பனாரஸ் எக்ஸ்பிரஸ் (22535) டிச., 6 முதல் ஜன., 18 வரையும், புவனேஸ்வர் -- ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (20895) டிச.,1 முதல் ஜன.,20 வரையும், தாம்பரம் -- நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் (22657) டிச., 3 முதல் ஜன., 24 வரையும், தாம்பரம் -- செங்கோட்டை எக்ஸ்பிரஸ் (20683) டிச., 3 முதல் ஜன., 25 வரையும் மேல்மருவத்துார் ரயில்வே ஸ்டேஷனில் தற்காலிகமாக நின்று செல்லும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement