Advertisement

மதுரையில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்க திட்டம்



மதுரை, : மதுரையில் ரூ.600 கோடியில் அமையவுள்ள டைடல் பார்க் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் 11 இடங்களில் மண் ஆய்வுப் பணிகள் நடந்துள்ளன.

தமிழகத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையை மேம்படுத்தும் வகையில் தென் மாவட்டங்கள் வளர்ச்சியை கருத்தில் கொண்டு சென்னைக்கு அடுத்து பெரிய அளவில் மதுரை மாட்டுத்தாவணியில் ரூ.600 கோடியில் டைடல் பார்க் அமைக்கப்படும் என கடந்தாண்டு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இரண்டு கட்டங்களாக 10 ஏக்கர் நிலத்தில் இத்திட்டத்தை செயல்படுத்த டெண்டர் வெளியிடப்பட்டது. முதற்கட்டமாக மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட், வேளாண் விற்பனை குழு வணிக வளாகம் இடையே 5.5 ஏக்கர் இடத்தை மாநகராட்சி ஒதுக்கியது.

அங்கு சென்னை டைடல் பார்க், எல்காட் அதிகாரிகள் குழு இரண்டு நாட்களாக ஆய்வு நடத்தியது. இதையடுத்து மண் தன்மை குறித்து 10 இடங்களில் ஆய்வு மேற்கொண்டது. மண் ஆய்வு பணிகள் இன்னும் தொடரவுள்ளது.

இதுகுறித்து டைடல் பார்க் அதிகாரி ஒருவர் கூறியதாவது: விழுப்புரம். தஞ்சை, துாத்துக்குடியில் மினி டைடல் பார்க் பணிகள் நடந்து வருகின்றன. சென்னை போல் மதுரையில் பெரிய அளவில் டைடல் பார்க் அமையவுள்ளது.

தென் மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேருக்கு இதன் மூலம் வேலைவாய்ப்பு கிடைக்கும். இரண்டு கட்டமாக இத்திட்டம் நடக்கவுள்ளது. முதற்கட்டமாக மாநகராட்சி ஒதுக்கிய 5.5 ஏக்கர் இடத்தில் 10 இடங்களில் மண் ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன.

இதையடுத்து வடிமைப்புகள், பொறியியல் திட்டம், மேலாண்மை குறித்த முடிவுகள் எடுக்கப்படும். குறிப்பாக மதுரை நகரின் கலாசாரம், வரலாற்றுகளை தொடர்புபடுத்தும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்றதான கட்டுமானத்தை வடிவமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்ட பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement