Advertisement

ஆதார் எண், கைரேகை பதிய  ஏஜன்சி; முன் மானியம் கிடைக்கும் வதந்தியால் குழப்பம்    

ADVERTISEMENT
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள் ஆதார் எண், கைரேகை பதிவு செய்ய பல மணிநேரம் ஏஜன்சி முன் காத்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் 9 தாலுகாக்களில் 832 ரேஷன் கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகள் மூலம் 8 லட்சத்து 67 ஆயிரம் கார்டுதாரர்கள் பயன்பெறுகின்றனர்.
இக்குடும்பத்தை சேர்ந்தவர்களில் 95 சதவீதம் பேர் காஸ் ஏஜன்சி மூலம் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். இவர்களில் 60 சதவீதம் பேர் பணம் செலுத்தி காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றுள்ளனர். 35 சதவீத ஏழை, கிராமப்புற குடும்பங்களுக்கு மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இலவச காஸ் அடுப்பு, சிலிண்டர் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு குடும்ப பெண்களிடம் பணம் பெறக்கூடாது என்பது அரசின் உத்தரவு. ஆனால், உஜ்வாலா திட்ட காஸ் சிலிண்டர் இணைப்பிற்கு ரூ.200 வரை வசூலிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. * ஆதார் கார்டு, கைரேகை பதிவு:

இந்நிலையில் காஸ் சிலிண்டர் இணைப்பு பெற்றவர்கள், தங்களது ஆதார் கார்டு எண்ணுடன், காஸ் ஏஜன்சிகளில் கைரேகைகளை பதிவு செய்தால், ஆண்டுக்கு மத்திய அரசு காஸ் மானியமாக ரூ.5000 வரை வழங்க உள்ளதாக வதந் ‛தீ' பரவி வருகிறது. இதனால், சிலிண்டர் இணைப்பு பெற்ற பெண்கள் காஸ் ஏஜன்சி முன் நீண்ட வரிசையில் காத்திருந்து ஆதார் கார்டு எண், கைரேகையை பதிவு செய்து செல்கின்றனர்.
இதனால் ஒவ்வொரு காஸ் ஏஜன்சியிலும் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.* ஆண்டுக்கு ரூ.5000 வதந் ‛தீ': காஸ் ஏஜன்சியினர் கூறியதாவது, ஆயில் நிறுவனம் கேட்டபடி ஆதார் எண், கைரேகை பதிவை மட்டுமே பெறுகிறோம். ஆண்டுக்கு மானியம் ரூ.5000 வழங்குவதாக எந்த அறிவிப்பும் இல்லை. உஜ்வாலா திட்ட இலவச சிலிண்டர் இணைப்பிற்கு பணம் பெறுவதில்லை. காஸ் சிலிண்டர் வாங்கியவர்கள் இறக்க நேரிட்டால், அவர்களது மானியத்தை ரத்து செய்யவே ஆதார் எண் வாங்கப்படுகிறது, என்றார். ///



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement