Advertisement

சிங்கம்புணரியில் அடைபட்ட கால்வாயால் நிரம்பாத நீர்நிலை

ADVERTISEMENT


சிங்கம்புணரி : சிங்கம்புணரி தாலுகாவில் அடைபட்டுள்ள வரத்துக்கால்வாய்களால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இத்தாலுகாவில் பொதுப்பணித்துறை, ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் 500க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன.

இவை தவிர குடிநீர் ஊருணிகள், ஜமீன் கண்மாய்கள், சிறிய குட்டைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட நீர்நிலைகள் உள்ளன. இவற்றிற்கு நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து தண்ணீர் வந்துசேரும் வகையில் 3 அடி முதல் 16 அடி அகலம் வரையிலான வரத்துக் கால்வாய்கள் உள்ளன. இக்கால்வாய்கள் பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் மண், புதர் மண்டி மேடாக காட்சியளிக்கிறது. சில இடங்களில் ஆக்கிரமிப்பாளர்கள் கால்வாய்களை மூடி கட்டுமானங்களை எழுப்பியுள்ளனர்.

குறிப்பாக எஸ்.புதூர் ஒன்றியத்தில் மலைகளில் இருந்து ஓடிவரும் தண்ணீர் அவற்றுக்குரிய கண்மாய்களுக்கு செல்லாமல் திசை மாறி வீணாகி விடுகிறது. இதனால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர். ரோடுகளை ஒட்டிய சில கால்வாய்களை மட்டும் பெயரளவுக்கு சில மீட்டர் துாரம் மட்டும் சீரமைக்கப்படுவதாக விவசாயிகள் குற்றம் சுமத்துகின்றனர். குடிநீர் ஊருணிகளுக்கே தண்ணீர் வர முடியாத அளவிற்கு கால்வாய்கள் மறைந்து வருகிறது. எனவே அனைத்து நீர்நிலைகளுக்கும் வரக்கூடிய வரத்துக்கால்வாய்களை சீரமைத்து ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்டெடுக்க மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement