Advertisement

பதிவுத்துறையின் மென்பொருளை மாற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு



மதுரை, : பெயர் வில்லங்கச் சான்று வழங்க பதிவுத்துறையின் மென்பொருளை '2.0' பதிலாக '3.0' ஆக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது கணவரின் பிரிக்கப்படாத குடும்ப சொத்துக்கள் யாருடைய பெயரில் உள்ளது என்பதை அறிய சார்பதிவாளர் அலுவலகத்தில் வில்லங்கச் சான்று கோரினார். பரிவர்த்தனை நடந்த பெயர் விபரங்களை அப்பெண்ணால் பெற முடியவில்லை. இதனால் சொத்துக்களில் தனது பங்கை கோர மேல் நடவடிக்கையை தொடர முடியவில்லை. பெயர் வில்லங்கச் சான்று கோரி வணிகவரி மற்றும் பதிவுத்துறை செயலர், பதிவுத்துறை ஐ.ஜி., மற்றும் மதுரை டி.ஐ.ஜி.,க்கு மனு அனுப்பினார்.

டி.ஐ.ஜி., 'சில சார்பதிவாளர் அலுவலகங்களில் பெயர் வில்லங்க தேடுதல் சான்று கோரப்பட்டுள்ளது. ஸ்டார் 2.0 மென்பொருளில் (சாப்ட்வேர்) பெயர் தேடுதல் வசதி அளிக்கப்படவில்லை,' என கடிதம் அனுப்பினார். அதை ரத்து செய்து பெயர் வில்லங்கச் சான்று வழங்க வேண்டும். அந்நடைமுறையை மீண்டும் கொண்டுவர முறையான மென்பொருளை உருவாக்க பதிவுத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என அப்பெண் உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.

நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.

மனுதாரர் தரப்பு: பதிவுத்துறை விதிகளின்படி, தனிநபர் பெயரில் வில்லங்கச் சான்று வழங்க வேண்டும். இதை நடைமுறையில் உள்ள மென்பொருள் மூலம் வழங்குவதற்கான வசதி இல்லை என்ற நிலைப்பாட்டை பதிவுத்துறை எடுக்க முடியாது. அறிவியல் வளர்ச்சியில் பெயர் வில்லங்கச் சான்று வழங்குவது கடினம் அல்ல. இது சொத்து பரிவர்த்தனையை மேற்கொண்ட நபர்களை அடையாளம் காண பெரிய அளவில் உதவும்.

தமிழக அரசு தரப்பு: பெயர் வில்லங்கச் சான்று வழங்குவதற்கான 'ஸ்டார் 3.0' மென்பொருள் வசதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.

நீதிபதி: '2.0' விற்கு பதிலாக '3.0' மென்பொருளாக மாற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை 8 வாரங்களில் முடிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement