Advertisement

ரோட்டோர மின்கம்பங்களால் தொடரும் விபத்து; குப்பை கூடாரமாவதால் வாகன ஓட்டிகள் அவதி

ADVERTISEMENT


மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள ரோடுகள் வாகன அதிகரிப்பால் விரிவாக்கம்

செய்யப்பட்டுள்ளது. அப்படி விரிவாக்கம் செய்யப்பட்ட ரோடுகளில் மின்கம்பங்களை மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால் பல இடங்களில் மின்கம்பங்கள் ரோட்டின் நடுவில் உள்ளது.கவனகுறைவாக செல்லும் வாகனங்கள் மின்கம்பங்கங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகும் போக்கு தொடர்கிறது. போக்குவரத்து நெரிசலான பல இடங்களில்

டிரான்ஸ்பார்ம் கூட இடையூறாக பாதுகாப்பற்ற சூழலில்தான் உள்ளது.

இந்த வேதனைக்கு மத்தியில் ரோட்டில் நிற்கும் மின்கம்பங்களுக்கு அடியில் குப்பை தொட்டிகளை வைத்து மேலும் இடையூறை உருவாக்கி வருகிறது. ரோடு விரிவாக்க பணியின்போதே மின்கம்பங்கள் அகற்றும் பணியையும் சேர்த்து ஒருசேர செய்து முடித்தால், பின்னாளில் அதற்கென செலவிடப்படும் நிதி சேமிப்பாவதுடன் ரோடு சேதமடைவதும் தவிர்க்கப்படும்.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement