Advertisement

மாவட்டத்தில் கட்டுக்கடங்கா நாய்த்தொல்லை; அச்சுறுத்தும் துரத்துதலால் அதிகரிக்கும் விபத்து    



விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் கட்டுக்கடங்கா நாய்த்தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அச்சுறுத்தும் துரத்துதலால் விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.

மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 5 நகராட்சிகள், 9 பேரூராட்சிகள், 11 ஒன்றியங்களில் 450 ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் பெரும் அச்சுறுத்தலாக இருப்பவை நாய் தொல்லை தான். கருத்தடை, நாய் வண்டி மூலம் முன்பு இருந்தது போன்ற எவ்வித தடுப்பு பணிகள் இல்லாததால் நாய்கள் அதிகளவில் பெருகிவிட்டன. இதனால் அவை நாள் பட தெருவில் சுற்றி திரிந்து அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளை தாக்கி விபத்தை ஏற்படுத்துகின்றன. இன்னொரு பக்கம் வெறிநாயாக மாறி மக்களை கடித்து ரேபிஸ் நோயை பரப்புகின்றன. இதற்காக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தீவிர முயற்சி செய்வதாக கலெக்டர் ஜெயசீலன் முன்பு ஒரு ஆய்வுக் கூட்டத்தில் தெரிவித்தார். கால்நடைத்துறை, நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் ஆகியவற்றோடு இணைந்து தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார். ஆனால் இன்று வரை அதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் எதையும் மாவட்ட நிர்வாகம் எடுத்ததாக தெரியவில்லை. சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்துார், ராஜபாளையம் நகர்களின் பிரதான ரோடுகளில் இந்த நாய்கள் அதிகளவில் உள்ளதால் வாகனங்களின் குறுக்கே விழுந்து விபத்தை ஏற்படுத்துவதும் வாகன ஓட்டிகளை துரத்துவதும் வாடிக்கையாக உள்ளது. தற்போது மழைக்காலம் முடிந்துள்ளதால் நாய்களின் இனப்பெருக்க காலம் துவங்குகிறது. இன்னும் அதிக குட்டிகள் போட்டால் நாய் தொல்லை இன்னும் பன்மடங்காகும். நாய் தொல்லையால் நாய்களை கொல்வதாக கூறுவதல்ல தீர்வு. அவற்றை கருத்தடை செய்து, வெறிநாய்க்கடி ஊசி போட்டு விடுவது தான் தீர்வு. இதன் மூலம் ரேபிஸ் பரவாது, புதிய நாய்களும் பெருகாது. தெரு நாய்களால் ரோட்டில் விபத்து, சிறுவர்கள் வெளியில் நடமாட முடியாத நிலை தான் உள்ளது.

3 மாதங்கள் முன் ஹைதராபாத்தில் 4 வயது சிறுவனை வெறிநாய்கள் கூட்டமாக கூடி கடித்து குதறின. இக்காட்சிகளை அலைபேசியில் பார்த்த பெற்றோர் அதன் பிறகு தங்கள் கண்காணிப்பிலே குழந்தைகளை வெளியில் அனுப்பும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். நாய்களால் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விபத்துக்களை கட்டுப்படுத்தவும், துரத்தி காயத்தை ஏற்படுத்துவதை தடுக்கவும், மாவட்ட நிர்வாகம் முதற்கட்ட நடவடிக்கைகளையாவது எடுக்க வேண்டும்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement