Advertisement

அரசு பள்ளியில் லேப்டாப் திருட்டு

துாத்துக்குடி:விளாத்திகுளம் அருகே அரசு பள்ளியில் பூட்டை உடைத்து லேப்டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்றனர்.

துாத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வெம்பூரில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. 500 மாணவர்கள் படிக்கின்றனர். நேற்று முன்தினம் இரவு பள்ளி வளாகத்தில் நுழைந்த மர்ம நபர்கள் நான்கு அறைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்த இரண்டு லேப்டாப்கள், எல்.இ.டி. 'டிவி'களை திருடிச் சென்றனர். மேலும் சான்றிதழ்கள் வைக்கப்பட்டிருந்த பீரோக்களையும் சேதப்படுத்தி சென்றனர். தலைமை ஆசிரியர் ராஜா சண்முகநாதன் மாசார்பட்டி போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர். 2012ம் ஆண்டிலும் இதே போல சம்பவம் நடந்தது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement