Advertisement

மின்சாதனங்களை விழிப்போடு பயன்படுத்த எச்சரிக்கை: விபத்தை தவிர்க்க மின்துறையினர் அட்வைஸ்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருவதால், மின் சாதனங்களை விழிப்போடு பயன்படுத்தவும், மின்சார பழுது குறித்து மின் வாரியத்துக்கு தகவல் தெரிவித்து விபத்தின்றி செயல்பட மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில், தொடர் பருவமழை காரணமாக, மின் விபத்துகள் தடுப்பு மற்றும் மின் பழுது நீக்க முன்னேற்பாடுகள் குறித்து கேட்டபோது, விழுப்புரம் மின்வாரி மேற்பார்வை பொறியாளர் லட்சுமி கூறியதாவது:

மாவட்டத்தில் பருவமழையை எதிர்கொள்ள மின்கம்பங்கள், மின்கம்பிகள், தளவாடப் பொருட்கள் மற்றும் வாகனங்கள் தயார் நிலையில் இருக்கிறது.

மழை பாதிப்பின்போது களப்பணியாளர்கள் உடனடியாக சென்று துரிதமாக பணிகளை செய்யவும், அந்தந்த பகுதி அலுவலர்களின் தலைமையில் குழு அமைக்கப்பட்டு, எந்த நேரமும் செயல்படும் வகையில் தயாராக உள்ளனர்.

மின்தடை மற்றும் மின் விபத்துக்கள் ஏற்படாத வகையில், பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்படுகிறது. தொடர் மழையின் போது ஏற்படும் மின்தடை, மின்சார பொருட்களின் சேதாரம் மற்றும் மின்விபத்துகள் பற்றி தெரிவிக்க சிறப்பு அழைப்பு எண் 9498390744 மொபைல் போனில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல்களை தெரிவிக்கலாம்.

பொதுமக்கள் தங்கள் பகுதியில் ஏற்படும் மின்தடை மற்றும் மின்சார பழுது புகார்களை 24 மணி நேரமும் சென்னை மின்னகத்தில் இயங்கும் 9498794987 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். மேலும், வாட்சப் எண் 9445855768 லும் தெரிவிக்கலாம்.

அறுந்து விழுந்து கிடக்கும் மின்கம்பிகள், தாழ்வு நிலை மின்கம்பிகள், தொங்கும் மின்கம்பிகளை பொதுமக்கள் தொடக்கூடாது. மின்சாரம் சார்ந்த பொருட்களில் தன்னிச்சையாக பொதுமக்கள் செயல்படாமல், மின்வாரிய பிரிவு அலுவலருக்கு தகவல் தெரிவித்து செயல்பட வேண்டும்.

இடி, மின்னலின் போது டிவி, மிக்சி, கிரைண்டர் கம்ப்யூட்டர் போன்றவற்றை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஈரமான கைகளுடன் மின்சாதனங்களை இயக்கக் கூடாது. மழைக் காலங்களில், டிரான்ஸ்பார்மர்கள், மின்கம்பங்கள், மின்சார பெட்டிகள், ஸ்டே ஒயர்கள் ஆகியவற்றின் அருகே செல்லக்கூடாது.

மின் கம்பத்திற்கான ஸ்டே ஒயர்கள் மீது, மின் கம்பத்தின் மீது கயிறு கட்டி துணிகளை காய வைப்பதை தவிர்க்க வேண்டும். கால்நடைகளை மின்கம்பியில் கட்டுவதையும் தவிர்க்க வேண்டும்.

இடி, மின்னலின்போது, மின்கம்பிகள், மின்கம்பங்கள், மரங்கள், உலோக கம்பி வேலி போன்ற பகுதி அருகே செல்ல வேண்டாம். பொதுமக்கள் தங்கள் வீடு, கடை, ஓட்டல் ஆகிவற்றில் தரமான ஒயரிங் பொருட்களை உபயோகிக்க வேண்டும். மின்சாதனங்களுக்கு நில இணைப்பு கொடுத்திருக்க வேண்டும். மின்கசிவால் ஏற்படும் விபத்தை தவிர்க்கும் வகையில், பாதுகாப்பான சர்க்யூட் பிரேக்கர்களை பொருத்த வேண்டும்.

பழுதான மின் உபகரணங்களை உடனடியாக மாற்றி விபத்தினை தவிர்க்க வேண்டும். விழுப்புரம் மாவட்ட மக்கள், தொடர் மழையின் போது விழிப்புணர்வோடும், முன்னெச்சரிக்கையோடு செயல்பட்டு மின் விபத்துக்கள் ஏற்படாமல் தவிர்க்க வேண்டும் என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement