Advertisement

ஜிப்மர் எதிரே மேம்பாலம் அமைக்க அதிகாரிகளுடன் அமைச்சர் ஆய்வு

ADVERTISEMENT


புதுச்சேரி: ஜிப்மர் மருத்துவமனை எதிரே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக அமைச்சர் லட்சுமிநாராயணன் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

புதுச்சேரி, ஜிப்மர் எதிரே உள்ள சாலையை கடக்க நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதையடுத்து, இச்சாலையின் குறுக்கே சிறிய மேம்பாலம் அமைக்க மத்திய தரைவழிப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு புதுச்சேரி அரசு சார்பில், கோரிக்கை வைக்கப்பட்டது.

இக்கோரிக்கையை தேசிய நெடுஞ்சாலையை பராமரிக்கும்,இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஒப்புக்கொண்டு,தேவையான நிலம் உள்ளதா என்பதை ஆய்வு செய்து அறிக்கை ஒப்படைக்கும்படி கோரியிருந்தது.

அதன்பேரில், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய பொறியாளர்களுடன் மேம்பாலம் அமைப்பது தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து நேற்று மருத்துவமனை எதிரே கள ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, ஆய்வுப் பணிகளை உடனடியாக முடித்து மேம்பாலம் அமைக்கும் பணியினை விரைந்து துவங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய திட்ட இயக்குநர் சக்திவேல், தேசிய நெடுஞ்சாலைகள் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்கள் உடனிருந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement