Advertisement

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிக்கு... அழைப்பு

மத்திய அரசு சார்பில் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் வரும் 2024ம் ஆண்டு ஜனவரி 19 ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடக்கிறது.

இந்த விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு சார்பில் கூடைப்பந்து, கால்பந்து, கபடி, கோகோ, வாலிபால், ஹாக்கி ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில், ஆண்கள், பெண்கள் என இருபாலரும் பங்கேற்கலாம்.இந்த போட்டிகளில் தமிழக அணி பங்கேற்பதற்கான தேர்வு போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி தேர்வு போட்டிகள் சென்னை ஜவகர்லால் நேரு உள் விளையாட்டு அரங்கில் பெண்களுக்கு கால்பந்தாட்ட போட்டி நாளை 30ம் தேதி காலை 7:00 மணிக்கும், ஆண்களுக்கு நாளை மற்றும் 1ம் தேதி காலை 7:00 மணிக்கும் நடக்கிறது.

பெண்களுக்கான கபடி போட்டி சென்னை, நேரு பூங்கா, மாவட்ட விளையாட்டு வளாகத்தில் நாளை காலை 7:00 மணிக்கும், ஆண்களுக்கு வரும் 1ம் தேதி காலை 7:00 மணிக்கும் நடக்கிறது.

இதே வளாகத்தில் பெண்களுக்கான கோகோ போட்டி நாளை 30ம் தேதி காலை 7:00 மணிக்கும், ஆண்களுக்கு 1ம் தேதி காலை 7:00 மணிக்கு நடக்கிறது.

சென்னை, மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் பெண்களுக்கான வாலிபால் போட்டி நாளை காலை 7:00 மணிக்கும், ஆண்களுக்கு வரும் 1ம் தேதி காலை 7:00 மணிக்கும் நடக்கிறது. இதே அரங்கில், பெண்களுக்கான ஹாக்கி போட்டி நாளை காலை 7:00 மணிக்கும், ஆண்களுக்கு வரும் 1ம் தேதி காலை 7:00 மணிக்கு நடக்கிறது.

சென்னை, ஜவஹர்கலால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டி வரும் 1ம் தேதி காலை 7:00 மணிக்கும், 2ம் தேதி காலை 7:00 மணிக்கு ஆண்களுக்கும் நடக்கிறது.

இந்த தினங்களில் அந்தந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு குறிப்பிட்டுள்ள நேரத்தில் பங்கேற்கலாம்.

போட்டிகளில் பங்கேற்போர் கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்கு பின் பிறந்திருக்க வேண்டும். ஆதார் கார்டு அல்லது பாஸ்போர்ட், பள்ளிக் கல்விச் சான்றிதழ், பிறப்பு சான்றிதழ் (குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முன், மாநகராட்சி அல்லது கிராம பஞ்சாயத்து மூலம் கடந்த 2013ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி அல்லது அதற்கு முன் வழங்கப்பட்டது) ஆவணங்களைக் கொண்டு வருவோர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவர்.

இந்த போட்டிகளில் பங்கேற்போருக்கு பயணப்படி, தினப்படி வழங்கப்பட மாட்டாது. இந்த தேர்வு போட்டிகள் தொடர்பான கூடுதல் விபரங்களை மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் இன்று 29ம் தேதி நேரிலோ அல்லது மொபைல் 74017 03485 எண்ணைத் தொடர்பு கொண்டோ தெரிந்து கொள்ளலாம்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement