Advertisement

கவர்னர் மாளிகையை முற்றுகையிட முயற்சி தொழிலாளர்கள் -- போலீசார் தள்ளுமுள்ளு

ADVERTISEMENT


புதுச்சேரி : விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த கோரி கவர்னர் மாளிகையை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற தொழிற்சங்கத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுப்பட்ட 24 பெண்கள் உட்பட 200 பேர் கைது செய்யப்பட்டனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். உணவு, மருந்து, வேளாண் இடுபொருட்கள் மீதான ஜி.எஸ்.டி., வரியை நீக்க வேண்டும். பெட்ரோலிய பொருட்கள், சமையல் காஸ் மீதான மத்திய கலால் வரியை குறைக்க வேண்டும்.

புதுச்சேரி அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்திற்கு நிதி ஒதுக்கி செயல்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பிற்கு உத்திரவாதம் அளிக்க வேண்டும். ரேஷன் கடைகள் திறந்து பொதுவினியோக முறையை செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தி, ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ., ஐ.என்.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ., உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்கள், விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கங்கள் சார்பில், கவர்னர் மாளிகை முற்றுகை போராட்டம் நேற்று நடந்தது.

காமராஜர் சாலை பாலாஜி தியேட்டர் அருகே ஊர்வலமாக புறப்பட்டனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாநில பொதுசெயலாளர் சேதுசெல்வம், சி.ஐ.டி.யூ., மாநில செயலாளர் சீனுவாசன், ஐ.என்.டி.யூ.சி., மாநில பொதுச் செயலாளர் ஞானசேகரன் தலைமை தாங்கினர்.

ஊர்வலம் காமராஜர் சாலை, நேரு வீதி வழியாக சென்றது. நேரு வீதி, மிஷன் வீதி சந்திப்பில் எஸ்.பி., சுவாதிசிங், இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையிலான போலீசார் பேரிகார்டுகள் வைத்து தடுத்தனர்.

பேரிகார்டுகளை தாண்டி செல்ல முயன்றனர். இதனால் போலீசாருக்கு தொழிற்சங்கத்தினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. பேரிகார்டுகளை தாண்டி சென்று சிலர் மறியலில் ஈடுப்பட்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட 24 பெண்கள் உட்பட 200 பேரை போலீசார் கைது செய்து விடுவித்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement