Advertisement

புதுச்சேரி பகுதியில் 205 குளங்கள் திடீர்... மாயம்; நீர்நிலைகளை பாதுகாக்க கோரிக்கை

ADVERTISEMENT
புதுச்சேரி, : புதுச்சேரியில் கண்டறியப்பட்ட 415 குளங்களில், 205 குளங்கள் மாயமாகி உள்ளது. நீர்நிலைகளை பாதுகாக்க அரசு துறைகள் கொண்ட ஒருங்கிணைந்த கமிட்டி அமைக்க வேண்டும்.

நீரின்றி அமையாது உலகு. பூமியில் வாழும் அனைத்து உயிரினங்கள், தாவரங்களுக்கு தண்ணீர் அவசியம். நீர் வளத்தை பாதுகாத்து, எதிர்கால சந்திகளுக்கு அளிப்பது அனைவரின் கடமை.

புதுச்சேரியில் நகர பகுதி நிலத்தடியில் கடல் நீர் உட்புகுந்து உப்பு தன்மை கலந்து விட்டது.

இதனால், பாகூர், மடுகரை, நெட்டபாக்கம், திருக்காஞ்சி உள்ளிட்ட இடங்களில் இருந்து போர் அமைத்து நகர பகுதிக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

எதிர்காலத்தில் கிராமப்பகுதி வரையிலும் நிலத் தடி நீர் உப்பு தன்மை மாற வாய்ப்பு உள்ளது. இதை தடுப்பதிற்கு ஒரே வழி, குளம், ஏரி, ஆறுகள், அணைகள் மூலம் நிலத்தடி நீரை சேமிப்பது.

புதுச்சேரி பிராந்தியத்தில் கடந்த 30 ஆண்டு முந்தைய அரசு ஆவணங்களில் 609 குளங்கள், 85 ஏரிகள், 8 படுகை அணைகள் உள்ளது.

இதில் பல குளங்கள் அரசு கட்டடங்களாக மாறிய பின்பு தற்போது 415 குளங்கள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 210 குளங்கள் மட்டுமே வெளியில் தெரிகிறது. 205 குளங்களில் பல பட்டா இடமாகவும், சாலை, கருமாதி கொட்டகை என மாறி உள்ளது.

கண்டறியப்பட்ட 210 குளங்களையும் கடந்த 2018 ஆண்டு கலெக்டராக இருந்த அருண், ஊரும் நீரும் என்ற திட்டத்தின் கீழ் நீர் நிலை பாதுகாப்பு குழு, குளங்கள் காப்போம், பாண்டிகேன், வாட்டர்ஸ்ஆப் புதுச்சேரி, அரபிந்தோ சொசைட்டி உள்ளிட்ட பல்வேறு தன்னார்வலர்கள் மூலம் புனரமைக்கும் பணியை துவக்கினார்.

அரியாங்குப்பம், நெட்டப்பாக்கம், உழவர்கரை நகராட்சியில் உள்ள குளங்கள் கண்டறிந்து, குளத்தின் அளவு, வரைப்படத்துடன் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது.

வில்லியனுார், பாகூர், திருக்கனுார் கொம்யூன் கீழ் உள்ள குளங்களின் வரைபடம் வெளியிடவில்லை.

அந்தந்த பகுதியில் உள்ள வங்கி, நிறுவனங்கள் உதவி மூலம் குளங்கள் துார்வாரப்பட்டது. அருண் மாற்றப்பட்ட பின்பு குளங்களை மீட்கும் முயற்சிக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை.

இதனால் நீரும் ஊரும் திட்டத்தின் கீழ் துார்வாரப்பட்ட குளங்கள் கூட மீண்டும் பாழ் அடைந்து வருகிறது.

குளங்களை மீட்டு புனரமைக்க தனியார் பள்ளிகள், நிறுவனங்கள முன் வந்தாலும், நகராட்சி, கொம்யூன் நிர்வாகங்களில் அதிகாரிகள் அடிக்கடி இடமாற்றத்தில் சென்று விடுவதால் அலைக்கழிப்பு நடக்கிறது.

குளம், ஏரி உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க, வருவாய்துறை, பொதுப்பணித்துறை, உள்ளாட்சித்துறை, திட்டம் மற்றும் ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகள் கொண்ட தனி கமிட்டி உருவாக்க வேண்டும்.

இந்த கமிட்டி மூலம் புதுச்சேரியில் உள்ள அனைத்து குளங்களையும் கண்டறிந்து, மீட்க வேண்டும்.

மீட்கப்படும் குளங்களை புனரமைக்க விரும்பும் நிறுவனங்கள், பள்ளி, கல்லுாரி நிர்வாகங்களுக்கு உடனுக்குடன் அனுமதி கொடுத்தால், அவை பாதுகாக்கப்படும்.

கட்டடங்கள்

புதுச்சேரி புதிய பஸ் நிலையம் ஏரியில் கட்டப்பட்டது. வழுதாவூர் சாலை கலெக்டர் அலுவலகம் பேட்டையன்சத்திரம் குளத்திலும், முதலியார் பேட்டை வண்ணாங் குளத்தில் ஆரம்ப சுகாதார நிலையம், மடுவுபேட் குளத்தில் லாஸ்பேட்டை நிலையம் என பல குளங்கள் தற்போது அரசாங்க கட்டடங்களாகவும், தனியார் வீடுகளாக வும் மாறி உள்ளது.நிலத்தடி நீர் சேமிப்பு அவசியம்

புதுச்சேரியில் கட்டப்படும் அனைத்து கட்டடங்களிலும் நிலத்தடி நீர் சேமிப்பு அமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், 90 சதவீத கட்டுமானங்களில் இது செயல்படுத்துவது கிடையாது. அரசின் 90 சதவீத கட்டடங்களில் நிலத்தடி நீர் சேமிப்பு அமைப்பு இதுவரை அமைக்கப்படவில்லை என்பது வேதனையான விஷயம்.துார் வாரும் பணி கிடப்பில்

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மரப்பாலம் டோபிகானா குளம் ரூ.49 லட்சம் மதிப்பில் துார்வாரி, நடைபாதை, இருக்கைகள் அமைத்துள்ளனர். மீதமுள்ள பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.ரூ.99 லட்சம் மதிப்பில் ஆயி குளம் மண் மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் ரூ.20 லட்சம் மதிப்பில் திப்ராயப்பேட்டை குளம்,ரூ.27 லட்சம் மதிப்பில் உப்பளம் தமிழ்தாய் நகர் புறாக்குளம் துார் வரும் பணிகளும் அறைகுறையுடன் நிற்கிறது.வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement