Advertisement

கோவை நகைக்கடையில் 200 சவரன் கொள்ளை

ADVERTISEMENT
கோவை மாவட்டம் காந்திபுரம், 100 அடி ரோட்டில் ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை நான்கு தளங்களுடன் செயல்படுகிறது. நேற்று காலை பணிக்கு வந்த ஊழியர்கள், தங்கள் பிரிவில் உள்ள நகைகளின் இருப்பை சரிபார்த்தனர். அளவு குறைந்ததால், கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் மர்மநபர் ஒருவர், கடையின் உள்ளே நுழைந்து நகைகளை கொள்ளையடித்துச் செல்வது தெரிந்தது.
இதையடுத்து நகைக்கடை நிர்வாகிகள், கோவை காட்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், துணை கமிஷனர்கள் சந்தீஸ், சண்முகம் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.கொள்ளையடித்த மர்மநபரை பிடிக்க, ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

7 வயது மகள் பலாத்காரம்; தாய்க்கு 40 ஆண்டு சிறைகேரளாவில், தன் 7 வயது மகள் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக உடந்தையாக இருந்த தாய்க்கு, 40 ஆண்டுகள் சிறை தண்டனையும், 20,000 ரூபாய் அபராதமும் விதித்து, விரைவு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அபராதத்தை செலுத்தத் தவறினால், மேலும் ஆறு மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அக்னி வீராங்கனை தற்கொலைஅக்னி திட்டத்தின் கீழ், கேரளாவைச் சேர்ந்த அபர்ணா, 20, என்பவர் நம் கடற்படையில் அக்னி வீராங்கனையாக தேர்வானார். இதற்காக, மஹாராஷ்டிராவின் மும்பைக்கு, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் பயிற்சிக்காக வந்தார். அங்குள்ள விடுதியில் தங்கியிருந்த அவர், நேற்று முன்தினம் தன் ஆண் நண்பருடன் மொபைல் போனில் பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரத்தில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அவரது நண்பர் மிரட்டினார். இதனால் வருத்தமடைந்த அபர்ணா, விடுதி அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.15 கோடி ஹெராயின் பறிமுதல்அசாமின் காமரூப் மாவட்டத்தில் வாகனத்தில் கடத்தி செல்லப்பட்ட 15 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயினை போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி பறிமுதல் செய்தனர்.

காதல் தோல்வியால் அகதி தற்கொலைஇலங்கை வவுனியாவைச் சேர்ந்த மோகன் மகன் தனுஷ். இவர் குடும்பத்தினருடன் சில ஆண்டுகளுக்கு முன் அகதியாக தனுஷ்கோடி வந்துள்ளார். பின் மண்டபம் முகாமில் தங்கி உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் உள்ள உறவினர் பெண்ணை தனுஷ் காதலித்து வந்தார். அடிக்கடி முகாமில் இருந்தபடி அலைபேசியில் பேசி வந்துள்ளார். இந்நிலையில் காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆனதால் தனுஷ் மனவேதனை அடைந்தார். நேற்று முகாமில் உள்ள வீட்டில் தனுஷ் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.

தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்திண்டுக்கல் மாவட்டம் கொசவப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகன் 52. இவர் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இவரை சில நாட்களுக்கு முன்பு பெற்றோர் தாக்கினர். இதை தொடர்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள், கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதையடுத்து முருகனை சஸ்பெண்ட் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் செந்தில் முருகன் உத்தரவிட்டுள்ளார்.

மகளுக்கு தொல்லை; தந்தை கைதுதிண்டுக்கல் பேகம்பூர் ஏ.பி., நகரை சேர்ந்த, 36 வயது கூலித்தொழிலாளிக்கு 12 வயதில், 7ம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். மனைவி இல்லாத நேரத்தில் அடிக்கடி தன் மகளுக்கு தந்தை பாலியல் தொந்தரவு கொடுத்தார். நேற்று முன்தினம் மாலை சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, தந்தை பாலியல் பலாத்காரம் செய்தார்.
வீட்டிற்கு தாய் வந்து பார்த்தபோது சிறுமி மயங்கிய நிலையில் இருந்தார். சிறுமியை மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்த தாய் அளித்த புகாரின் படி, தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

27 சவரன் நகை திருடிய கல்லுாரி மாணவர் சிக்கினார்திருப்பத்துார் மாவட்டம், ஆம்பூர் அடுத்த மாதனுாரை சேர்ந்தவர் பாஸ்கர். இவர், அப்பகுதியில் திருமண மண்டபம் நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கரி, 53. பாஸ்கர் வீட்டில் அதே பகுதியை சேர்ந்த சங்கர் என்பவரின் மனைவி பல ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். சங்கரின் மகன் விஜயகாந்த், 22. தன் மகனை போல விஜயகாந்த்தை அவர் பாவித்து வீட்டின் அனைத்து பகுதிக்கும் சென்று வர அனுமதி அளித்தார்.
இந்நிலையில் கடந்த, 25ல் வெளியே சென்ற சங்கரி வீடு திரும்பியபோது, அவரது அறையில் பீரோ திறந்து கிடப்பதையும், அதிலிருந்த, 27 சவரன் நகை காணாமல் போனதையும் அறிந்து அதிர்ச்சியடைந்தார். இது குறித்து சங்கரி புகார் படி, ஆம்பூர் போலீசார் விசாரணை நடத்தினர். விஜயகாந்த் அந்த நகைகளை திருடியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து, அவரிடமிருந்த நகையை பறிமுதல் செய்தனர்.வாசகர் கருத்து (3)

  • Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா

    தமிழகம் ஒரு அமைதி பூங்கா. குற்றங்கள் எதுவும் இல்லை என்று முதல்வர் காதில் பூ சுற்றுவார். சுற்றிக்கொள்ள வாருங்கள்.

  • பேசும் தமிழன் -

    திண்டுகல் பேகம்பூர்.... 43 வயது பெயரில்லாத நபர்... எங்கேயோ இடிக்குதே ???

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement