Advertisement

தமிழக காங்கிரசுக்கு தேவை இள ரத்தம்!

Audio இந்த செய்தியை கேட்க

Your browser doesn’t support HTML5 audio

ADVERTISEMENT

ஆர்.பாலமுருகன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:என்னவோ, தமிழக காங்கிரஸ் மிகவும் வலிமையாக இருப்பதாக நினைத்து, 'வரும் லோக்சபா தேர்தலில், தி.மு.க.,விடம், 15 சீட்கள் கேட்க வேண்டும்' என்று, அக்கட்சியினர் மாநில தலைவர் அழகிரியிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

முதலில், அத்தனை இடங்களில் நிற்பதற்கு, கட்சியில் தகுதியான தலைவர்கள் இருக்கின்றனரா என்பதே சந்தேகம்; ஏனெனில், இவர்கள் தி.மு.க.,வின் ஊதுகுழல் போலவே செயல்படுகின்றனர்.

எவ்விதமான சுய சிந்தனையின்றி செயல்படும் தமிழக காங்., கட்சியில், தொண்டர்கள் கூட தைரியமாக இருக்கின்றனர்; தலைவர்கள் தான், ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி பேச தயங்குகின்றனர்.

இந்த லட்சணத்தில், மாநில தலைவர் பதவிக்கு அடித்து கொள்கின்றனர். இவர்களும் பலமுறை தலைவரை மாற்றி விட்டனர்; ஆனால், 55 ஆண்டு காலமாக, தமிழகத்தில் ஆட்சி எட்டாக்கனியாகவே இருக்கிறது.

முதலில், கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டும். அதற்கு தகுதியான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும். முன்னாள் தலைவர்களுடன் சமரசம் செய்யாத ஒரு இளைஞரை, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை போன்ற துணிச்சலான நபரை தேர்வு செய்ய வேண்டும். அப்படி பார்த்தால், மனதில் பட்டதை பயமில்லாமல் பேசும், கார்த்தி சிதம்பரம் பொருத்தமாக இருப்பார்.

காங்., தலைவர்கள், 'காமராஜர் ஆட்சி அமைப்போம்' என்று கூறிய போது, கார்த்தி மட்டுமே அதை மறுத்து, 'காமராஜர் ஆட்சி போன்று, இனி யாராலும் ஆட்சி அமைக்க முடியாது. வேண்டுமெனில் அவர் சாயலில் ஆட்சி அமைக்கலாம்' என்று, மனதில் பட்டதை மிகவும் துணிச்சலாக எடுத்துரைத்தார்; உண்மையும் அதுதான்.

மக்களின் நாடி பிடித்து ஆட்சி செய்த காலம் அது. மக்களின் பொருளாதாரம், ஜாதியை அடிப்படையாக கொண்டு ஆட்சி செய்யும் காலம் இது. எனவே, மூத்த தலைவரான அழகிரி, பதவி விலகி இளைய தலைமுறைக்கு வழிவிடுவதுடன், மேலிடத்திலும் கார்த்திக்கு மாநில தலைவர் பதவி வழங்க சிபாரிசு செய்தால், தமிழக காங்கிரஸ் கொஞ்சமாவது தேறும். செய்வாரா அழகிரி?வாசகர் கருத்து (11)

 • R.MURALIKRISHNAN - COIMBATORE,இந்தியா

  செத்தவனுக்கு இளரத்தம் செலுத்தினால் என்ன செலுத்தாட்டி என்ன.

 • கட்டத்தேவன்,,திருச்சுழி -

  தமிழக காங்கிரஸ் கட்சியில் யாரை தலைவராக போட்டாலும் இவர்களின் சண்டை ஓயாது ஒருத்தருக்கு அடித்துக் கொண்டு அடுத்த தலைவருக்கு குழியை தோண்டுவார்கள் அது ஒருபக்கம் இருந்தாலும் காங்கிரஸ் கட்சிக்கு வருகின்ற பாராளுமன்ற தேர்தலுக்குள் உடனடி களையெடுப்பு அவசியம் அப்படி கட்சியை விட்டு தூக்குவதென்றால் முதலில் திமுக ஜால்ராவான இப்போதைய தலைவர் அழகிரியையும் அடுத்து திமுகவின் அல்லக்கையாக இருக்கும் ஒண்ணாம் நம்பர் சகுனியான பீட்டர் அல்போன்ஸையும் கட்சியை விட்டே துரத்தி விடவேண்டும் அப்போதுதான் காங்கிரஸ் கட்சி உருப்படும்.

 • sankar - Nellai,இந்தியா

  ஏதாவது இரத்த வங்கியில் சென்று வாங்கவேண்டியதுதானே

 • Rpalnivelu - Bangalorw,இந்தியா

  கார்த்தி சிதம்பரம் பல மெகா ஊழல் வழக்குகளில் தொடர்புடையவர். அவரது தந்தையை போலவே பெயிலில் உள்ளார். டெஸ்ட் டியூபில் வளர்த்து ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கலாம். தவிர கான்க்ரோஸ் ஒரு ஆண்டி போண்டி மடம்

 • M S RAGHUNATHAN - chennai,இந்தியா

  70 வயதிற்கு மேல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கவும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement