Advertisement

பதவி உயர்வு கேட்டு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்



சென்னை, சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில், வேளாண், தோட்டக்கலை துறை இயக்குனர்கள் அலுவலகம் இயங்கி வருகிறது.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர்கள் ஆலோசனை கூட்டம், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாகவும், தோட்டக்கலைத் துறை துணை இயக்குனர் ஆலோசனை கூட்டம், மூன்றாவது தளத்திலும் நேற்று நடந்தது.

இந்நிலையில், வேளாண் அலுவலர்கள் பலர், உணவு இடைவேளையின்போது, அலுவலகத்திற்கு வெளியே திரண்டனர். பதவி உயர்வு பட்டியலை விரைந்து வெளியிடும்படி, கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, மெரினா காவல் நிலையத்தில் இருந்து ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.

வேளாண் துறை உயர் அதிகாரிகள், இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதாக உறுதியளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement