Advertisement

சின்னாபின்னமான பிராடிஸ் சாலை அதிகாரிகள் கவனிக்காததால் அதிருப்தி

ADVERTISEMENT


பூந்தமல்லி, பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட ஏழாவது வார்டில் உள்ள பிராடிஸ் சாலையில், 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 500 மீட்டர் துாரமுள்ள இந்த சாலை, கொரோனா ஊரடங்கிற்கு முன் அமைக்கப்பட்டது.

தற்போது இந்த சாலை, கடுமையாக சேதமடைந்துள்ளது. இதனால், இங்குள்ள அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி மாணவியர் கடும் அவதிப்படுகின்றனர்.

பூந்தமல்லியில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், கரையான்சாவடி சந்திப்பில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அந்த சூழலில், பூந்தமல்லி வழியாக ஆவடி செல்லும் அரசு பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும், இந்த சாலை வழியாக இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இந்த சாலை குண்டும் குழியுமாக மாறி, மழைக்கு ஆங்காங்கே தண்ணீர் தேங்கி, குளம் போல் காட்சி அளிக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த சாலை சீரமைக்கப்படும் நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக சீரமைக்கப்படாததால், சின்னாபின்னமாகி உள்ளது.

இது குறித்து, வார்டு உறுப்பினரிடம் பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், இருசக்கர வாகனங்களில் செல்வோர், தினமும் சிரமப்பட்டு வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில், இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர்.

அதேபோல், இப்பகுதியில் தெரு நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதால், பொதுமக்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.

எனவே, சம்பந்தப்பட்ட பூந்தமல்லி நகராட்சி அதிகாரிகள், நாய்கள் தொல்லைக்கு தீர்வு கண்டு, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement