Advertisement

பிரதான சாலையில் மீண்டும் பள்ளம் தொடர் பிரச்னைக்கு தீர்வு வருமா?

ADVERTISEMENT


எம்.ஜி.ஆர்., நகர், அண்ணா பிரதான சாலையில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், இரு இடங்களில் மீண்டும் சாலை உள்வாங்கி, பள்ளம் ஏற்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் மண்டலம், எம்.ஜி.ஆர்., நகரில், அண்ணா பிரதான சாலை உள்ளது. இது, கே.கே., நகர் மற்றும் அசோக் நகரை இணைக்கும் பிரதான சாலை.

இருவழிப் பாதையாக உள்ள இச்சாலை, 1.3 கி.மீ., நீளம் மற்றும் இருபுறம் தலா, 35 அடி அகலம் உடையது. இச்சாலையின் மட்டத்தில் இருந்து, 20 அடி ஆழத்தில், நெசப்பாக்கம் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்குச் செல்லும், 750 மி.மீ., விட்டம் உடைய, கழிவு நீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.

இக்கழிவு நீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக மண் சரிந்து, அண்ணா பிரதான சாலையில், கடந்த சில ஆண்டுகளாக அடிக்கடி, 'மெகா' பள்ளங்கள் ஏற்பட்டு வந்தன.

இதற்கு நிரந்தர தீர்வு காண்பதற்காகவும், கழிவு நீர் குழாயின் அழுத்தத்தை குறைக்கவும், 2.20 கோடி ரூபாய் மதிப்பில், மாற்றுப் பாதையில் இன்னொரு கழிவுநீர் குழாய் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு செப்., மாதம் அண்ணா பிரதான சாலை, எம்.ஜி.ஆர்., நகர் சந்தை சந்திப்பில், குடிநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, மீண்டும் மெகா பள்ளம் ஏற்பட்டது.

இதையடுத்து, பள்ளத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து, குடிநீர் குழாய் உடைப்பை சீர் செய்யும் பணிகள், பல மாதங்களாக நடந்து வந்தன.

இதனால், அச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இந்நிலையில், கடந்த பிப்., மாதம் குடிநீர் குழாய் சீர் செய்யப்பட்டது. தற்போது, இரு நாட்களுக்கு முன், அதே சாலையில் கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக, மீண்டும் இரு இடங்களில் சாலை உள்வாங்கி, பள்ளம் ஏற்பட்டது.

இதையடுத்து, குடிநீர் வாரியம் சார்பில், கழிவுநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீர் செய்யப்பட்டு, பள்ளத்தில் மண் கொட்டி, தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.

அண்ணா பிரதான சாலையில், கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து பள்ளம் விழுந்து வருவதால், வாகன ஓட்டிகள் மற்றும் பகுதி மக்கள் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.



வாசகர் கருத்து (1)

  • Kalyanaraman - Chennai,இந்தியா

    2000 ரூபாய்க்கு ஓட்டு போட்டா, ரோடு ஓட்டையாத்தான் இருக்கும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement