Advertisement

டிவி நிருபர் குடும்பத்தினரிடம் ரூ. 3 லட்சம் நிவாரணம் வழங்கல்

திருநெல்வேலி:திருநெல்வேலியில் விபத்தில் இறந்த பாலிமர் டிவி நிருபர் குடும்பத்தினரிடம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ரூ. 3 லட்சம் நிவாரண தொகைகாசோலையை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.

திருநெல்வேலி என்.ஜி.ஓ.காலனியை சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி 52. பாலிமர் தொலைக்காட்சியின் மாவட்ட செய்தியாளர். சில தினங்களுக்கு முன் திருநெல்வேலி- - மதுரை நான்கு வழிச்சாலையில் தாழையூத்து அருகே டூவீலரில் செய்தி சேகரிப்பிற்கு சென்றபோது திடீரென நாய் குறுக்கே ஓடியதால் விபத்தில் சிக்கி இறந்தார்.

அவரது குடும்பத்திற்கு முதல்வர் ஸ்டாலின் முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சம் வழங்க உத்தரவிட்டார். அதன்படி சபாநாயகர் அப்பாவு, நிவாரண நிதிக்கான காசோலையை முத்துக்குமாரசாமி குடும்பத்தினரிடம் வழங்கினார். திருநெல்வேலி கோட்டாட்சியர் ஷேக் அயூப், தாசில்தார் சரவணன் உடன் இருந்தனர்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement