Advertisement

வாலிபர் கொலையில் சிறுவர்கள் மூவர் கைது

தூத்துக்குடி:கோவில்பட்டியில் வாலிபர் கொலை செய்யப்பட்டதில் மூன்று சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே ஆலம்பட்டியை சேர்ந்த கனகராஜ் மகன் அருண்பாரதி 20. நேற்று முன்தினம் அங்குள்ள அய்யனார் கோயில் அருகே ஒரு கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. ஏற்கனவே ஒருவரை வெட்டிய முன் விரோதத்தில் அதே பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மூவர் சேர்ந்து அருண்பாரதியை கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து மூன்று சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர். அருண்பாரதி பட்டியலின சமூக வாலிபர். இந்திய குடியரசு கட்சி (அ) மாநில தலைவர் சூசை அவரது வீட்டிற்கு சென்று பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், ''தென் மாவட்டங்களில் சாதி ரீதியிலான வன்முறைகள் அதிகரித்துள்ளன. கொலையில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். பெரியவர்கள் கொலை செய்துவிட்டு சிறுவர்களை குற்றவாளிகளாக மாற்றும் சூழ்நிலை உள்ளது. அருண்பாரதி குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிவாரணம் , குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். இல்லையென்றால் டிச. 22 ல் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தலைமையில் தமிழக அரசு தலைமைச் செயலகம் மூடப்படும் என்றார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement