Advertisement

ஹிந்து கடவுள்களுக்கு அவமரியாதை போஸ்டருக்கு எதிர்ப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலியில் நாய்களுக்கு ஹிந்து கடவுள்களின் பெயர்களை குறிப்பிட்டு போஸ்டர் அச்சிட்ட மாற்று மதத்தவருக்கு ஹிந்து முன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருநெல்வேலியில் பொதுமக்கள் பிரசனைக்கு குரல் கொடுக்கிறேன் என அடிக்கடி ஏதாவது போராட்டங்களில் ஈடுபடும் சிராஜ் என்ற வாலிபர் மாநகராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை இருப்பதாக கூறி ஒரு போஸ்டர் அச்சிட்டு ஒட்டியுள்ளார். அதில் ஒவ்வொரு நாய்க்கும் ஹிந்து கடவுள்களின் பெயர்களை சூட்டி கிண்டலடித்துள்ளார்.

இதுகுறித்து திருநெல்வேலி மாநகர் மாவட்ட ஹிந்து முன்னணி செயலாளர் ஏ. சுரேஷ் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாய்களுக்கு ஹிந்து கடவுள்களின் பெயர்களை சூட்டி போஸ்டர் அச்சிட்டுள்ளார். ஹிந்துக்களுக்கு ஆத்திரமூட்டும் வகையில் மத பிரிவினைவாதம் ஏற்படுத்தும் சிராஜ் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement