Advertisement

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா: தங்க சப்பரத்தில் சுவாமி எழுந்தருளல்

ADVERTISEMENT
திருச்செந்துார் : திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், கந்தசஷ்டி விழா 2ம் நாளான நேற்று சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி திருவிழா நேற்று முன்தினம் கோலாகலமாக துவங்கியது. 2ம் நாளான நேற்று அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனமும், 5 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தது. பின்னர் ஜெயந்திநாதர் யாகசாலையில் எழுந்தருளினார்.

யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது.
மதியம் உச்சிகால தீபாராதனை முடிந்தவுடன் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்கச் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்கள் வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல் பாட சண்முக விலாசம் மண்டபத்திற்கு வந்தருளினார்.

மாலையில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்து சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்து வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கந்த சஷ்டி 3ம் நாளான இன்று (15ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. நவ 18-ம் தேதியன்று மாலை 4.00 மணிக்கு கோயில் கடற்கரையில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. 19-ம் தேதி திருக்கல்யாண வைபவத்தை முன்னிட்டு அன்று அதிகாலை 5 மணியளவில் அம்பாள் தபசு காட்சிக்கு புறப்பாடும், மாலை 5 மணிக்கு சுவாமி, அம்பாள் தோள்மாலை மாற்றும் நிகழ்ச்சியும், இரவு திருக்கல்யாண வைபவமும் நடக்கிறது.



வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement