Advertisement

பட்டியலின வாலிபர்கள் மீது சிறுநீர் கழித்து கொடூரம்

திருநெல்வேலி:திருநெல்வேலி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்ற பட்டியல் இன வாலிபர்கள் இருவரை தாக்கி அவர்கள் மீது சிறுநீர் கழித்து 5 மணிநேரம் சித்திரவதை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தை சேர்ந்த 21, 23 வயதுடைய பட்டியலினத்தை சேர்ந்த இரு வாலிபர்கள் அக்., 30 இரவு 7:00 மணியளவில் அவர்களது வீடு அருகே தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றனர். அங்கு கஞ்சா மற்றும் மது போதையில் இருந்த நான்கு பேர் கும்பல் இருவரையும் வழிமறித்தனர்.

நீங்கள் என்ன ஜாதி என கேட்டனர். பட்டியல் இனத்தை சேர்ந்தவர்கள் என பதிலளித்தனர். இதையடுத்து மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அந்த கும்பல் இருவரையும் வாள் மற்றும் கத்தியால் கடுமையாக தாக்கினர். உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். இருவரது அலைபேசிகள், வங்கி ஏ.டி.எம். அட்டைகள், வெள்ளி அரைஞாண் கயிறு, டூவீலரையும் பறித்துக் கொண்டனர்.

ஏ.டி.எம்.,ல் பணம் இல்லாததால் அதில் ஒருவர் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளரிடம் போனில் பேச சொல்லி பணம் செலுத்த கூறினர். அவர் 5 ஆயிரம் பணம் போட்டுள்ளார். கும்பலில் இருவர் ஏ.டி.எம்.மில் பணம் எடுக்க சென்றனர். அவர்கள் போனில் பேசி மேலும் இருவரை அங்கு வரவழைத்தனர்.

5 மணி நேரம் தாக்குதல்



ஆறு பேரும் சேர்ந்து தொடர்ந்து இருவரையும் ஜாதியை சொல்லி திட்ட இரவு 7:00 மணிக்கு 12:00 மணி வரை தாக்கியுள்ளனர். 12:00 மணிக்கு பிறகு அந்த கும்பல் அசந்த நேரத்தில் இருவரும் நிர்வாணமாக தங்கள் வீட்டுக்கு தப்பிச் சென்றனர்.

இருவரும் அக்.,31 தேதி காலை திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சம்பவம் தொடர்பாக தச்சநல்லூர் போலீசார் ராஜவல்லிபுரம் மற்றும் மணக்காட்டை சேர்ந்த பொன்மணி, நல்லமுத்து, ஆயிரம், ராமர், சிவா, லட்சுமணன் ஆகிய 6 பேரை கைது செய்தனர்.

இந்த கும்பல் வேறு ஒரு நபரை கொலை செய்ய திட்டமிட்டு ஆயுதங்களுடன் அங்கே இருந்ததாகவும் ஜாதி ரீதியாக சிக்கிக் கொண்டவர்களை நள்ளிரவு முழுவதும் தாக்கி கொடுமைப்படுத்தியதும் விசாரணையில் தெரியவந்தது.

மணி மூர்த்தீஸ்வரம் பகுதியில் இதற்குமுன்பும் இதே போல ஒரு கும்பல் இருவரை தாக்கி பணம் பறித்து நிர்வாணமாக்கி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. அதன் பிறகும் அங்கு இரவு நேரங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவதில்லை.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement