Advertisement

வனவிலங்கு வேட்டைக்கு அமைத்த கண்ணியில் சிக்கி தந்தை, மகன் பலி

ADVERTISEMENT


திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கல்லிடைக்குறிச்சி அருகே அயன் சிங்கம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி பேச்சிமுத்து, 55. அவரது மகன் வனராஜ், 28.

இவர்களுக்கு சொந்தமான வயல் மணிமுத்தாறு கால்வாய் அருகே உள்ளது. வயலுக்கு இரவு காவலுக்கு பேச்சிமுத்து, தன் மகனுடன் நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு சென்றார். அதிகாலை அவர்கள் வயலை ஒட்டிய ஓடையில் மின்சாரம் பாய்ந்து இறந்து கிடந்தனர்.

போலீசார் இருவரது உடல்களையும் மீட்டனர். மேற்கு தொடர்ச்சி மலை சரிவிலிருந்து மான், மிளா, பன்றி போன்ற வனவிலங்குகள் இரவில் நீர் அருந்த வயல் பகுதிகளுக்கு வருவது வழக்கம்.

அவற்றை, அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் மின் கண்ணி வைத்து பிடிக்க, இரும்பு வலைகளை கால்வாயில் போட்டு கம்பியை மின் கம்பத்தில் கொக்கி போட்டிருந்தனர்.

இரவில் அதை தெரியாமல் மிதித்ததால் தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது.

டி.எஸ்.பி., சதீஷ்குமார் விசாரணை நடத்தினார். அப்பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, சுப்பிரமணியன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், இருவரை தேடி வருகின்றனர்.

உயிரிழந்த இருவரின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.



வாசகர் கருத்து (1)

  • RADE - loch ness,யுனைடெட் கிங்டம்

    வெறும் ஒரு லக்ஷம் அரசிடம் இருந்து மாட்டினவங்க சொத்தை ஜப்தி செய்து இழப்பீடு குடுங்க, இது போல குற்றம் நடக்கும் பொழுது அவர்கள் மேல் நீதி மன்றம் நடவடிக்கை எடுக்கும் வரை விரைவாக சொத்தை மற்றவர் பெயர்க்கு மற்றும் அல்லது விற்கும் முயற்சி தடுக்கும் படி சட்ட திருத்தும் கொண்டுவந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்றும் அவர்கள் வெளிவர முடியாத படி எந்த ஒரு சலுகையும் இல்லாமல் சாகும் வரை ஆயுள் கைதியாக வையுங்க.

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement