Advertisement

தாமிரபரணி ஆற்றில் கழிவுநீர் ஹிந்து முன்னணி போராட்டம்

ADVERTISEMENT


திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகராட்சி, மேலப்பாளையம் பகுதியில் இருந்து வரும் சாக்கடை கழிவு நீர் பாளையங்கால்வாயில் சேர்கிறது. தற்போது பாளையங்கால்வாய் குறுக்கே குலவணிகர்புரம் பகுதியில் புதிய பாலம் கட்டும் பணி நடக்கிறது.

அதற்காக கழிவு நீர் ஓட்டத்தை நிறுத்தி இருப்பதால், கால்வாயில் அதிக அளவு கழிவு நீர் சேர்ந்துள்ளது. அதை நேற்று தாமிரபரணி ஆற்றில் திருப்பி விட்டனர். இதனால் தாமிரபரணியில் கழிவு நீர் கலந்தோடி அதிகமாக மாசுபட்டுள்ளது.

இது குறித்து நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன் தலைமையில் மேலநத்தம் அருகே பால் ஊற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி கமிஷனர் தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ் பார்வையிட்டு, கழிவு நீர் ஆற்றில் கலக்காத படி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.



வாசகர் கருத்து

    முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Login via Dinamalar:
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
 
Advertisement